ETV Bharat / state

மிக்ஜாம் புயல்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக திரள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 7:31 AM IST

CM MK Stalin: கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M K Stalin Chief Minister of Tamil Nadu
மு.க.ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினர், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள். மேலும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் எழிலன், கருணாநிதி, பரந்தாமன் மற்றும் அரவிந்த் ரமேஷ் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இதர வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

  • அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.

    2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

    முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு… pic.twitter.com/QBIHxuR7uP

    — M.K.Stalin (@mkstalin) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “பெருநகர சென்னை மாநகராட்சியால் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கூடுதலாக மற்றொரு இடத்திலும் உணவு தயாரிக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எழிலன் முதலமைச்சரிடம் பேசுகையில், ஆயிரம் விளக்கு பகுதியில் 30,000 குடும்பங்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 16 முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புயல் இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம்.

மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னலில் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம், அரசோடு கரம் கோர்த்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம் கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை, ஆவடியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு - தமிழக அரசு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.