ETV Bharat / state

எல்லாமே இலவசம்!... நீங்க வந்தா மட்டும் போதும்... சென்னை மாநகராட்சியின் அதிரடி வெளியீடு!

author img

By

Published : Jul 30, 2023, 8:04 AM IST

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டுக்கான இலவசத் தொழிற்பயிற்சிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பித்துப் பயிற்சியில் சேரலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டுக்கான இலவசத் தொழிற்பயிற்சிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பித்துப் பயிற்சியில் சேரலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCVT - National Council for Vocational Training) சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும், மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.

காலியான இடங்கள்: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (34 இடங்கள்), பிளம்பர் (26 இடங்கள்), ஃபிட்டர் (126 இடங்கள்), எலக்ட்ரிசீயன் (66 இடங்கள்), மோட்டார் மெக்கானிக் (116 இடங்கள்), எக்ட்ரானிக் மெக்கானிக் (6 இடங்கள்) என மொத்தம் 71 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 184 இடங்களில் 113 இடங்கள் சேர்க்கை செய்யப்பட்டு விட்டது.

பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவசப் பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியான இடங்கள்
தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியான இடங்கள்

நலத்திட்டங்கள்: பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களான சீருடை, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கெட், மதிய உணவு மற்றும் பயிற்சிக் காலத்தில் மாதம்தோறும் ரூபாய் 750/- பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க: 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கு தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தினை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாகப் பெறலாம் அல்லது இணையதள முகவரி www.chennaicorporation.gov.in மூலம் இலவசமாகப் பதிவு இறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையினைப் பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2023ஆகும்.

மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது அசல் சான்றிதழ்களான பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி சேர்க்கையின்போது அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேர்வதற்கான அனுமதி வழங்கப்படும்" எனத் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்!..3.82 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணி தொடங்கப்பட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.