ETV Bharat / state

ஆல் அவுட் கொசு மருந்து குடித்த 3 வயது குழந்தை பலி

author img

By

Published : Oct 11, 2021, 4:15 PM IST

Updated : Oct 11, 2021, 5:03 PM IST

சென்னை பம்மலில் ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது 3 வயது ஆண் குழந்தை கிஷோர், நேற்றிரவு வீட்டில் இருந்த ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக அருந்தியுள்ளான்.

சிகிச்சை

இதனைக் கண்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டான்.

உயிரிழப்பு

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கிஷோர் உயிரிழந்தான்.
இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நாளை 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- மா. சுப்பிரமணியன்

Last Updated : Oct 11, 2021, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.