ETV Bharat / state

ஆவடி மாநகராட்சியில் திமுக நோக்கி படையெடுக்கும் அதிமுக கவுன்சிலர்கள்

author img

By

Published : Mar 1, 2022, 1:58 PM IST

ஆவடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவதால் அதிமுகவில் பரபரப்பு avadi admk councilor joined dmk in the presence of minister nasar
ஆவடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவதால் அதிமுகவில் பரபரப்புavadi admk councilor joined dmk in the presence of minister nasar

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் 48 இடங்களுக்கும், அதிமுக 48 இடங்களிலும் போட்டியிட்டன. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக 35 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதேபோல் திமுக கூட்டணி சேர்த்து 43 இடங்களில் வெற்றி கண்டது.

அதிமுக சார்பில் 4 இடங்களும் சுயேச்சை ஒருவரும் வெற்றிபெற்றனர். இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கையில் 14 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஷ் வெற்றி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து திமுகவில் இணைந்தார். மேலும் தனது காரிலிருந்து அதிமுக கட்சிக் கொடியை அகற்றி விட்டு திமுக கட்சிக் கொடியைப் பொருத்திக் கொண்டார். இந்த காட்சிகள் வெளியாகி ஆவடியில் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்று தற்போது அதிமுக சார்பில் 16 வது வார்டில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் மீனாட்சி ஆதிகேசவன், தனது கணவருடன் அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து அதிமுகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்த அவர்களை அமைச்சர் நாசர் திமுக கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

ஆவடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவதால் அதிமுகவில் பரபரப்பு

அப்பொழுது அமைச்சர் நாசர் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி. இது தாய் கழகம் தான் எனக் கூறிய அவர், உங்கள் வார்டுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியும் அளித்தார். ஆவடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி மாநகராட்சியில் அதிமுகவே இல்லை என்ற நிலையை உருவாக்க திமுக செயல்படுவதாகப் பேசப் பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் மீதம் 2 பேர் மட்டுமே கவுன்சிலராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் : ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.