ETV Bharat / state

ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு - பர்தா அணிந்த பெண் கைவரிசை

author img

By

Published : Oct 24, 2021, 9:52 AM IST

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களுக்கு உதவுவது போன்று நடித்து அவர்களிடம் பணத்தை நூதனமாகத் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

atm forgery  fraudulent  atm fraudulent  atm fraud lady arrested in madurai  atm fraud lady  robbery  money fraudulent  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  ஏடிஎம் கொள்ளை  ஏடிஎம் மையங்களில் உதவுவதுபோல் திருட்டு  சென்னையில் ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு  ஏடிஎம் மையங்களில் பெண் ஒருவர் உதவுவது போல் திருட்டு
ஏடிஎம் கொள்ளை

மதுரை: உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைபட்டியைச் சேர்ந்தவர் லிங்கம்மாள் (65). இவர் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள எஸ்பிஜ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

இவர் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள எஸ்பிஜ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக வரிசையில் நின்ற அவரிடம், அவருக்கு பின்னாலிருந்த பர்தா அணிந்த பெண் ஒருவர், தான் பணம் எடுத்துதருவதாக கூறியுள்ளார்.

ஏடிஎம் கார்டு மோசடி

லிங்கம்மாளும் ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத்தர கூறியுள்ளார். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் கார்டைச் சொருகிய பெண் பாட்டி உங்கள் அக்கௌண்டில் பணம் இல்லை எனக் கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து லிங்கம்மாள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தார். இதனை கவனித்துக்கொண்டிருந்த அருகிலிருந்தவர், லிங்கம்மாளிடம் சென்று, அந்தப்பெண் கார்டை மாற்றிக்கொடுத்துவிட்டார், அதை சரிபாருங்கள் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சுதாரித்த லிங்கம்மாள் கூச்சலிட்டுள்ளார். அப்போது தப்ப முயன்ற அந்தப்பெண்ணை பிடித்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அப்பெண்ணிடம் சார்பு ஆய்வாளர் அருண் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அந்த பெண் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மணிமேகலை (23). இவர் பல வங்கியின் போலி ஏடிஎம் கார்டை வைத்துக் கொண்டு, தன் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து கொண்டு, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பவர்களின் வரிசையில் நின்று கொள்வார்.

தொடர் திருட்டு

பின்னர் அங்கு வரும் வயதானவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல், அவர்களுடைய கார்டுக்குப் பதில் தன்னிடம் உள்ள போலி கார்டை கொடுத்து, உங்கள் கணக்கில் பணம் இல்லை எனக்கூறி அவர்களை அனுப்பிவிட்டு, ஒரிஜினல் கார்டை வைத்து பணம் எடுக்கும் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்பெண் இதே போல் உசிலம்பட்டி, பேரையூர், வத்தலக்குண்டு போன்ற பல ஊர்களில் தனது கைவரிசையைக் காட்டியதும், ஏடிஎம் மையங்களில் பணம் திருடியது தொடர்பாக இவர் மீது உசிலம்பட்டி உள்பட பல காவல்நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சம்பவத்தன்று இதே போல் மூன்று பேரிடம் ரூ.35 ஆயிரம் வரை பணம் திருடியது தெரிய வந்தது. இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிமேகலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வணிகவரித் துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.