ETV Bharat / state

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு... திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு...

author img

By

Published : Mar 3, 2022, 1:56 PM IST

Updated : Mar 3, 2022, 2:04 PM IST

நாளை நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

announcement-of-allotment-of-posts-in-dmk-alliance-in-urban-local-body
announcement-of-allotment-of-posts-in-dmk-alliance-in-urban-local-body

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வென்றுள்ளது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. அத்துடன் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெருவாரியான வார்டுகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று (மார்ச்.2) பதவி ஏற்றுக்கொண்டனர்.

கும்பக்கோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு
கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு

இந்நிலையில், நாளை (மார்ச்.3) காலை நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு.

திமுக கூட்டணியில் பதவிகள் ஒதுக்கீடு அறிவிப்பு
திமுக கூட்டணியில் பதவிகள் ஒதுக்கீடு அறிவிப்பு

காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்

மாநகராட்சி மேயர்
1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்

மாநகராட்சி துணை மேயர்
1. சேலம் மாநகராட்சி
2. காஞ்சிபுரம் மாநகராட்சி

நகராட்சித் தலைவர்
1. தேவகோட்டை நகராட்சி - சிவகங்கை மாவட்டம்

2. தேனி நகராட்சி - தேனி மாவட்டம்
3. காங்கேயம் நகராட்சி - திருப்பூர் மாவட்டம்

4. சுரண்டை நகராட்சி - தென்காசி மாவட்டம்

5.கருமத்தம்பட்டி நகராட்சி - கோவை மாவட்டம்

6.கோபிசெட்டிபாளையம் நகராட்சி - ஈரோடு மாவட்டம்


நகராட்சி துணைத் தலைவர்
1. கூடலூர் நகராட்சி - நீலகிரி மாவட்டம்

2. ஆரணி நகராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்

3. நரசிங்கபுரம் நகராட்சி - சேலம் மாவட்டம்

4. காரமடை நகராட்சி - கோவை மாவட்டம்

5. குடியாத்தம் நகராட்சி - வேலூர் மாவட்டம்

6.திருவேற்காடு நகராட்சி - திருவள்ளூர் மாவட்டம்

7. குன்றத்தூர் நகராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்

8. தாராபுரம் நகராட்சி - திருப்பூர் மாவட்டம்

9. உசிலம்பட்டி நகராட்சி - மதுரை மாவட்டம்


பேரூராட்சி தலைவர்
1.மங்களம்பேட்டை பேரூராட்சி - கடலூர் மாவட்டம்

2. சின்னசேலம் பேரூராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

3. வடுகப்பட்டி பேரூராட்சி - தேனி மாவட்டம்

4. பூலாம்பட்டி பேரூராட்சி - சேலம் மாவட்டம்

5. பிக்கட்டி பேரூராட்சி - நீலகிரி மாவட்டம்

6. பேரையூர் பேரூராட்சி - மதுரை மாவட்டம்

7. பட்டிவீரன்பட்டி பேரூராட்சி - திண்டுக்கல் மாவட்டம்

8.திருபெரும்புதூர் பேரூராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்

பேரூராட்சி துணைத் தலைவர்

1. சங்கராபுரம் பேரூராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

2. ஜகதால பேரூராட்சி - நீலகிரி மாவட்டம்

3. கீழ்குந்தா பேரூராட்சி – நீலகிரி மாவட்டம்

4.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி - திருநெல்வேலி மாவட்டம்

5. கன்னிவாடி பேரூராட்சி - திருப்பூர் மாவட்டம்

6. நங்கவல்லி பேரூராட்சி - சேலம் மாவட்டம்

7. கருப்பூர் பேரூராட்சி - சேலம் மாவட்டம்

8.டி.என்.பாளையம் பேரூராட்சி - ஈரோடு மாவட்டம்

9. நாட்றாம்பள்ளி பேரூராட்சி - திருப்பத்தூர் மாவட்டம்

10. உடையார்பாளையம் பேரூராட்சி - அரியலூர் மாவட்டம்

11. கணியூர் பேரூராட்சி - திருப்பூர் மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள்

மாநகராட்சி துணை மேயர்
1. மதுரை மாநகராட்சி – மதுரை மாவட்டம்

நகராட்சி தலைவர்
1. திருமுருகன்பூண்டி நகராட்சி - திருப்பூர் மாவட்டம்
2.கொல்லன்கோடு நகராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்

நகராட்சி துணைத் தலைவர்

1.திருத்துறைப்பூண்டி நகராட்சி - திருவாரூர் மாவட்டம்

2. சிதம்பரம் நகராட்சி - கடலூர் மாவட்டம்

3.பழனி நகராட்சி - திண்டுக்கல் மாவட்டம்


பேரூராட்சி தலைவர்

1.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி - கோவை மாவட்டம்

2. வீரவநல்லூர் பேரூராட்சி - திருநெல்வேலி மாவட்டம்

3. அந்தியூர் பேரூராட்சி - ஈரோடு மாவட்டம்

பேரூராட்சி துணைத் தலைவர்
1. வடமதுரை பேரூராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

2. தொட்டியம் பேரூராட்சி - திருச்சி மாவட்டம்

3. பண்ணைப்புரம் பேரூராட்சி - தேனி மாவட்டம்

4. கீரனூர் பேரூராட்சி - புதுக்கோட்டை மாவட்டம்

5. தளி பேரூராட்சி - திருப்பூர் மாவட்டம்

6.தேவர்சோலை பேரூராட்சி - நீலகிரி மாவட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள்

மாநகராட்சி துணை மேயர்
1. திருப்பூர் மாநகராட்சி - திருப்பூர் மாவட்டம்

நகராட்சி தலைவர்
1. கூத்தாநல்லூர் மாநகராட்சி - திருவாரூர் மாவட்டம்


நகராட்சி துணைத் தலைவர்

1.பவானி நகராட்சி - ஈரோடு மாவட்டம் .
2. புளியங்குடி நகராட்சி - தென்காசி மாவட்டம்.

3. அதிராம்பட்டினம் நகராட்சி - தஞ்சாவூர் மாவட்டம் .

4. போடிநாயக்கனூர் நகராட்சி - தேனி மாவட்டம்


பேரூராட்சி தலைவர்
1. வத்திராயிருப்பு பேரூராட்சி - விருதுநகர் மாவட்டம்
2. பூதப்பாண்டி பேரூராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்

3. சிவகிரி பேரூராட்சி - தென்காசி மாவட்டம்

4. புலியூர் பேரூராட்சி - கரூர் மாவட்டம்


பேரூராட்சி துணைத் தலைவர்
1. கூத்தைப்பார் பேரூராட்சி - திருச்சி மாவட்டம்

2. ஊத்துக்குளி பேரூராட்சி - திருப்பூர் மாவட்டம்

3.மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி - தேனி மாவட்டம்

4. கீரமங்கலம் பேரூராட்சி - புதுக்கோட்டை மாவட்டம்

5.சேத்தூர் பேரூராட்சி - விருதுநகர் மாவட்டம்

6. ஜம்பை பேரூராட்சி - ஈரோடு மாவட்டம்


மதிமுக போட்டியிடும் இடங்கள்

மாநகராட்சி துணை மேயர்
1. ஆவடி மாநகராட்சி - திருவள்ளூர் மாவட்டம் .

நகராட்சி தலைவர்
1.மாங்காடு நகராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்.


நகராட்சி துணைத் தலைவர்

1.பரமக்குடி நகராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்

2. கோவில்பட்டி நகராட்சி - தூத்துக்குடி மாவட்டம்

3. குளித்தலை நகராட்சி - கரூர் மாவட்டம்


பேரூராட்சி தலைவர்
1. திருவேங்கடம் பேரூராட்சி - தென்காசி மாவட்டம்

2. ஆடுதுறை பேரூராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

3.சென்னசமுத்திரம் பேரூராட்சி - ஈரோடு மாவட்டம்


பேரூராட்சி துணைத் தலைவர்
1. பாளையம் பேரூராட்சி - திண்டுக்கல் மாவட்டம்

2. அவல்பூந்துறை பேரூராட்சி - ஈரோடு மாவட்டம்

3. அரச்சலூர் பேரூராட்சி – ஈரோடு மாவட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி

மாநகராட்சி துணை மேயர்
1. கடலூர் மாநகராட்சி - கடலூர் மாவட்டம்

நகராட்சி தலைவர்
1. ஜெயங்கொண்டம் நகராட்சி - அரியலூர் மாவட்டம்

2. நெல்லிக்குப்பம் நகராட்சி - கடலூர் மாவட்டம்


நகராட்சி துணைத் தலைவர்
1. திண்டிவனம் நகராட்சி - விழுப்புரம் மாவட்டம்

2. பெரியகுளம் நகராட்சி - தேனி மாவட்டம்

3.இராணிப்பேட்டை நகராட்சி - இராணிப்பேட்டை மாவட்டம்

பேரூராட்சி தலைவர்
1. பெண்ணாடம் பேரூராட்சி - கடலூர் மாவட்டம்

2. காடையாம்பட்டி பேரூராட்சி - சேலம் மாவட்டம்

3.பொ.மல்லாபுரம் பேரூராட்சி - தருமபுரி மாவட்டம்


பேரூராட்சி துணைத் தலைவர்
1. கடத்தூர் பேரூராட்சி - தருமபுரி மாவட்டம்

2. திருப்போரூர் பேரூராட்சி - செங்கல்பட்டு மாவட்டம்

3. புவனகிரி பேரூராட்சி - கடலூர் மாவட்டம்

4. கொளத்தூர் பேரூராட்சி - சேலம் மாவட்டம்

5. வேப்பத்தூர் பேரூராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்

6. அனுமந்தன்பட்டி பேரூராட்சி - தேனி மாவட்டம்

7. ஓவேலி பேரூராட்சி - நீலகிரி மாவட்டம்

Last Updated :Mar 3, 2022, 2:04 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.