ETV Bharat / state

‘கோபுரம் கோபுரம் தான் குப்பை குப்பை தான்... இது ஒரு சாடிஸ்ட் அரசாங்கம்’ - திமுக ஆட்சியை விலாசிய ஜெயக்குமார்

author img

By

Published : Oct 8, 2022, 4:19 PM IST

தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சியை சாடிஸ்ட் ஆட்சி என்றும், கோபுரம் கோபுரம் தான் குப்பை குப்பை தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

former minister jayakumar  jayakumar  dmk regime  dmk  jayakumar slams dmk  aiadmk  திமுக ஆட்சியை விலாசிய ஜெயக்குமார்  ஜெயக்குமார்  அதிமுக  திமுக  மழை காலம்  பருவமழை  எழில் மிகு சென்னை  சிங்கார சென்னை  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
ஜெயக்குமார்

சென்னை: ராயபுரம் தொகுதி தங்கசாலை பகுதியில் திருமலை திருப்பதி திருக்குடை விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , “திமுக என்றாலே பொய்தான். பொய் சொல்வது மட்டுமே இவர்கள் வேலை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90-95 சதவீதம் பணி முடிந்து விட்டதாக பொய் கூறுகின்றனர். மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது.

தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பதியாவதால் டெங்கு, ப்ளூ போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையிலேயே நிலைமை இவ்வாறு உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், போர்கால அடிப்படையில் பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பு ஆட்சியோ பணிகளை முடிக்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.

எங்கள் ஆட்சியில் 'வொர்க் மோர்', 'டாக் லெஸ்' என்பதுதான். ஆனால், இந்த ஆட்சியை பொருத்தவரை 'டாக் மோர்', 'ஒர்க் லெஸ்' ஆக இருக்கிறது. இந்த ஆட்சியில் பொய், பித்தலாட்டம் அதிகமாகிவிட்டது.

எழில் மிகு சென்னை என ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பல நன்மைகளை செய்தார். ஆனால், இவர்களோ சிங்கார சென்னையை, ‘டெங்கு சென்னை’, ‘காலரா சென்னை’, ‘ஃப்ளூ சென்னை’ என்று மாற்றிவிட்டனர். என்ன தான் ஆனாலும் கோபுரம் கோபுரம் தான் குப்பை குப்பை தான்.

போஜராஜன் பாலம் கட்டும் பணியை எங்கள் ஆட்சியில் தொடங்கி 50 சதவீதம் நிறைவு செய்திருந்தோம். இதனை கூட முழுமையாக நிறைவு செய்யாமல் அப்படியே விட்டு விட்டார்கள். இது ஒரு சாடிஸ்ட் அரசாங்கம்.

நாங்கள் சட்டப்பேரவை மரபுகள், மாண்புகளை மதிப்பவர்கள். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்க்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்க கூடாது. சபாநாயகர் மரபுகள் மாண்புகள் விதிகளின்படி நடந்து கொள்வாரா, இல்லையா என்று 17ஆம் தேதி தெரிந்து விடும்” என்றார்.

மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும். 2024-ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது. இதை எல்லாம் விட்டு விட்டு ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இது எல்லாம் ஒரு பிரச்சனையா?.

இவர்கள் அரசியலிலும் திரைப்படத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இதுகுறித்து ஒரு ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். இதுதான் நான் இவர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்.

ஓமந்தூரார் மருத்துவமனை பலருக்கு உதவியாக உள்ளது. அதை தலைமை செயலகமாக மாற்ற நினைத்தால் மக்கள் விட மட்டாரகள். அதிமுக அதை பார்த்துக்கொண்டு இருக்காது. அவ்வாறு மாற்ற நினைத்தால் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்கும்.

ஓ.பி.எஸ் பினாமி பணம் எல்லாம் ஜே.சி.டி பிரபாகரனிடம் தான் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானால் பேசலாம் என்று இல்லை. பகுத்து அறிந்து ஆய்ந்து பேச வேண்டும். திமுக தாக்கம் இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.