ETV Bharat / state

வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Nov 28, 2022, 1:29 PM IST

வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்கியது, வாகனங்களின் வடிவத்தையும் சைலன்சர்களை மாற்றியும் இயக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதேபோல் வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியை பெறாமல், வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துகளுக்கு வழி வகுக்கும்.

இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி, அபாயகரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். எனவே இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பைக் சாகசம்- சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.