ETV Bharat / state

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபி தேசியத் தலைவர்: பிரச்னை இதுதானாம்

author img

By

Published : Jul 25, 2020, 1:19 PM IST

Updated : Jul 25, 2020, 7:42 PM IST

சென்னை: நங்கநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் தனியாக வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு ஏபிவிபி தேசியத் தலைவர் சிறுநீர் கழித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

arrest
arrest

சென்னை நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 62 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே வளாகத்தில் குடியிருக்கும் டாக்டர் சுப்பையா என்பவருக்கும் கார் நிறுத்துவதில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதுதொடர்பாக 62 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கார் நிறுத்துமிடத்தை சுப்பையா பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு அனுமதி மறுத்த அந்த 62 வயது மதிக்கத்தக்க பெண், தனது கார் நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தும் சுப்பையாவிடம் வாடகை கேட்டுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த சண்முகம், மேற்கொண்டு வாடகை கேட்ட நபரின் வீட்டின் முன் குப்பை, பயன்படுத்திய முகக்கவசங்களைப் போட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, அப்பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதில் டாக்டர் சுப்பையா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.மேலும், பாஜக-வின் மாணவ அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிவிபி அமைப்பு வெளியிட்ட பதிவு
ஏபிவிபி அமைப்பு வெளியிட்ட பதிவு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப நண்பர் பாலாஜி விஜயராகவன் கூறுகையில், "என்னுடைய அத்தை நங்கநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். எங்களுக்கு முதல் மாடியில் வசித்து வரும் டாக்டர் சுப்பையா தொடர்ந்து, எங்களுடன் கார் நிறுத்துவதில் வாக்குவாதம் செய்து வந்தார். எங்களுக்கு இரண்டு கார் நிறுத்தும் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அவர் கார் நிறுத்த முனைந்தார்.

பெண்ணின் உறவினரின் பதிவு
பெண்ணின் உறவினரின் பதிவு
பெண்ணின் உறவினரின் பதிவு
பெண்ணின் உறவினரின் பதிவு

ஒருமுறை எங்கள் காரின் நம்பர் பிளேட்டை உடைத்துள்ளார். வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பது மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கார் நிறுத்தும் பிரச்னையை அடுக்குமாடி சங்கத்திடம் இருதரப்பும் முறையிட்டுப் பேசி, சுமுகமாக முடித்துக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், தொடர்ந்து ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) தலைவர் டாக்டர் சுப்பையா பாலாஜி தவறுதலாக நடந்து கொண்டதை தொடர்ந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிசிடிவி ஆதாரங்களுடன் கடந்த ஜூலை 11ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

காவல் துறை தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் நேற்று (ஜூலை 24) முதல் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியது.

இதனையடுத்து சுப்பையாவின் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏபிவிபி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "ஏபிவிபி தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா மீது திட்டமிட்டு பரப்பப்படும் வீண் பழி. சிசிடிவி காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை, இதில் தெளிவான விசாரணை வேண்டும்.

அறிக்கை
அறிக்கை

மேலும், இரு குடும்பங்களிடையே கார் நிறுத்துவதில் பிரச்னை இருந்தது உண்மை தான். ஆனால், காங்கிரஸ் NSUI இயக்கத்தால், இப்பிரச்னை பூதாகரமாக ஜோடிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய பிரதேச முதலமைச்சருக்கு கரோனா உறுதி!

Last Updated :Jul 25, 2020, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.