ETV Bharat / state

ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் - ஆவடி சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Jan 29, 2022, 5:11 PM IST

ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு திருடன் ஒருவன் நோட்டமிட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் -  ஆவடி சிசிடிவி காட்சிகள்
ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் - ஆவடி சிசிடிவி காட்சிகள்

சென்னை:ஆவடி காமராஜர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபீர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

தனது வீட்டில் நடந்த திருட்டு முயற்சியை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.அதில் இளைஞர் ஒருவர் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வந்து நோட்டமிடுகிறான். அப்பொழுது கண்கணிப்பு கேமரா இருப்பதை கண்ட அவன் கேமராவை திரும்பி வைக்கும் நிலையில் அது மீண்டும் பழைய நிலையில் வந்து விடுகிறது.

அதனை அறியாத திருடன் அங்கிருந்த பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறான்.பின்னர் அங்கிருக்கும் குளிர்சாதன பெட்டியை திறந்து கோன் ஐஸ் எடுத்து சாப்பிட்டு கொண்டே மீண்டும் வீட்டை நோட்டமிடுகிறான். பின்னர் சில ஐஸ் கிரீமை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். இவை அனைத்து அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் - ஆவடி சிசிடிவி காட்சிகள்

இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்த திருடனை கண்டுபிடிக்க உதவிடுமாறு வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில் திருட வந்த திருடன் ஏற்கெனவே ஒருமுறை இரவில் வீட்டினுள் வந்து சிசிடிவி கேமராவை மேல் நோக்கி வைத்துவிட்டும்,லவ் பேர்ட்ஸ் கூண்டு கட்டப்பட்டிருந்த கம்பிகளை அவிழ்த்து விட்டும் சென்றுள்ளான்.

அதை நாங்கள் கண்டு சுதாரிக்கவில்லை, மீண்டும் வீட்டினுள் வந்து லவ் பார்ட்ஸ் கிளியை திருடி சென்றுள்ளான் என கூறினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவே இதனை இணையத்தில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’கொக்கென்று நினைத்தாரோ..?’:தமிழ்நாட்டின் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.