ETV Bharat / state

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

author img

By

Published : Apr 28, 2022, 12:41 PM IST

Updated : Apr 28, 2022, 1:10 PM IST

தமிழகத்தில் மின் கட்டமைப்பை மேம்படுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் ‘வெள்ளளூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வருமா’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , “தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் கூடிய வகையில் 2021- 2022 ல் 216 துணை மின் நிலையங்களும் , 2022 - 2023 ஆண்டுகளில் 100 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்டத்திற்கு 2021 - 22 நடப்பு ஆண்டில் 6 துணை மின் நிலையங்களும், 2022 - 23 ஆண்டுகளில் 7 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 13 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் திருவாரூர் உள்பட 3 கோயில்களில் உள்ள மின் பாதைகள் புதை வழி தடங்கள் ஆக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம் - நேரலை

Last Updated :Apr 28, 2022, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.