ETV Bharat / state

18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!

author img

By

Published : Sep 25, 2019, 11:20 AM IST

சென்னை: முன்னதாக ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

metro

சென்னையில் கடந்தமாதம் அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்ப்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் வசம் மெட்ரோ நிர்வாகம் ஒப்படைத்தது.

இதற்கு, மெட்ரோ ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில், மேலும் ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

அதன்படி, எல்ஐசி, அரசினர் தோட்டம், சின்னமலை, நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், அரும்பாக்கம், சிஎம்பிடி ஆகிய ஒன்பது ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களையும் ஒரு சில வாரத்தில் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மெட்ரோ ஊழியர்கள், மெட்ரோ ரயில் நிலைய தொழிற்சங்கத்தினர் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பதால், தொழில்நுட்பம் தெரியாமல் பணியாற்றும் தனியார் ஊழியர்களினால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 25.09.19

தற்போது வரை 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு.. சிறப்பு செய்தி..

கடந்த மாதம் ஏற்கனவே 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மேலும் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிலைய
உயர் அதிகாரிகளிடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறிப்பாக,
1.எல்ஐசி, 2.அரசினர் தோட்டம், 3.சின்னமலை, 4. நங்கநல்லூர் ரோடு, 5.மீனம்பாக்கம், 6.ஈக்காட்டுதாங்கல், 7.அசோக்நகர், 8.அரும்பாக்கம், 9.சிஎம்பிடி ஆகிய ரயில் நிலையங்கள் இன்று முதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது..

மொத்தம் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன .மீதமுள்ள நிலையங்கள் ஒருசில வாரத்தில் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ஊழியர்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய தொழிற்சங்கத்தினர் குழப்பத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பதால் தொழில்நுட்பம் தெரியாமல் பணியாற்றும் தனியார் ஊழியர்களினால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்..

tn_che_01_special_story_of_privatization_of_Metro_rail_stations_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.