ETV Bharat / state

11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள்... இனி நேரடியாக தமிழ்நாடு பாடத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி

author img

By

Published : Dec 9, 2019, 6:12 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பில் வேறு பாடத்திட்டத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எழுதுவதற்கு அனுமதியளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

dpi
dpi

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், '' 2017-18ஆம் கல்வியாண்டிற்கு முன்பு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) 11ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், தற்போது பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இதுபோன்று படித்துவரும் 12ஆம் வகுப்பு மாணவர்களை, மீண்டும் 11ஆம் வகுப்பு தேர்வு எழுத அறிவுறுத்தாமல், அவர்களின் நலன் கருதியும் மன அழுத்தத்தினைக் குறைக்கும் வகையிலும் 12ஆம் வகுப்பு தேர்வினை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

அதனடிப்படையில், சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தற்போது பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எழுதலாம்.

2017- 18ஆம் கல்வியாண்டிற்கு முன்பு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதே பாடத் தொகுப்பில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்.

இந்த மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்படும். நேரடி தனித் தேர்வர்களுக்கு இந்தச் சலுகைப் பொருந்தாது.

இனிவரும் காலங்களில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அந்தப் பள்ளியின் சான்றிதழுடன் 12ஆம் வகுப்பில் சேர்வதற்கு முன்னர் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெ.தீபா மனுவுக்கு கெளதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Intro:12 ம் வகுப்பு தேர்விற்கு புதிய சலுகை


Body:12 ம் வகுப்பு தேர்விற்கு புதிய சலுகை

சென்னை,

11 ம் வகுப்பில் வேறுப் பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக பாடத்திட்டத்தில் எழுதுவதற்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது,2017-18ம் கல்வி ஆண்டிற்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் அல்லது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தற்பொழுது பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இதுபோன்று படித்துவரும் 12 மாணவர்களை மீண்டும் பதினோராம் வகுப்பு தேர்வு எழுத அறிவுறுத்தாமல் , அவர்களின் நலனை கருதியும், மன அழுத்தத்தினை குறைக்கும் வகையிலும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை தமிழக பாடத்திட்டத்தில் எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

அதனடிப்படையில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில், வேறு மாநில பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தற்போது பள்ளிகளில் சேர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், பதினோராம் வகுப்பில் படித்த பாட தொகுப்பிற்கு இணையான பாட தொகுப்பில் நேரடியாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக பாடத்திட்டத்தில் எழுதலாம்.

2017- 18 கல்வி ஆண்டிற்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதே பாடத தொகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்.

இந்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்படும்.
நேரடி தனித் தேர்வர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

இனிவரும் காலங்களில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அந்தப் பள்ளியின் சான்றிதழுடன் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்வதற்கு முன்னர் பள்ளிக்கல்வி இயக்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.