ETV Bharat / state

பாமக நகரச் செயலாளர் படுகொலை; போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்; ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

author img

By

Published : Jul 10, 2023, 1:16 PM IST

செங்கல்பட்டில் பாமக நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொலை சம்பந்தமாக போலீசார் ஒருவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

பாமக நகர செயலாளர் படுகொலையால் உறவினர்கள் போராட்டம்
பாமக நகர செயலாளர் படுகொலையால் உறவினர்கள் போராட்டம்

பாமக நகரச் செயலாளர் படுகொலையால் உறவினர்கள் போராட்டம்

செங்கல்பட்டு: பாமக நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்டதும், கொலை சம்பந்தமாக ஒருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நகரத்தில் வசிப்பவர் நாகராஜ் (வயது 45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். நாகராஜ் செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் நாகராஜ் நேற்று இரவு வழக்கம் போல தனது கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார்.

அப்போது திடீரென ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் நாகராஜனை சூழ்ந்து கொண்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே நாகராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த நாகராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகராஜை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சாய் பிரனீத் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து உடனடியாக நாகராஜைக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இந்தப் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் செங்கல்பட்டு கே.கே நகரைச் சேர்ந்த அஜய் என்பவரை போலீசார் பிடிக்க முயன்று உள்ளனர். அஜய் தப்ப ஓடியதாகத் தெரிகிறது.

இதனால் போலீசார் அவரை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். பின் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அஜயை சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் அவரிடம் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னதாக செங்கல்பட்டில் வன்னியர் சங்க பொதுச் செயலாளர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது பாமக நகர செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் நாகராஜின் உறவினர்கள் மனு அளிக்கக் குவிந்துள்ளனர்.

இதையும் படிங்க: முன் விரோதத்தால் பட்டப் பகலில் அரங்கேறிய கொலை சம்பவம் - ஆறு பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.