ETV Bharat / state

விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: மிஸ் பண்ணிடாதீங்க!

author img

By

Published : Jan 12, 2023, 3:57 PM IST

விமான நிறுவனங்களில் வேலைக்கான பயிற்சி பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா
விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா

அரியலூர்: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி ஏவிஷேசன் அகடாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியை வழங்கவுள்ளது. இப்பயிற்சிக்கு 18 முதல் 25 வயது நிரம்பிய, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி 3 மாதம் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000-த்தை தாட்கோ வழங்கவுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு AASSC (AEROSPACE SKILL SECTOR COUNCIL) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈஷாவுக்கு சென்ற பெண் மரணம் : உண்மை வெளிவரும் என ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.