ETV Bharat / sports

மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை

author img

By

Published : Jul 24, 2021, 10:12 PM IST

Updated : Jul 25, 2021, 7:56 AM IST

2016 ரியோ ஒலிம்பிக்கின் தோல்வியோ இன்றைய வெற்றிக்கான பாலபாடம் என மீராபாய் சானு தனது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளார்.

மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு
மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு

டோக்கியோ (ஜப்பான்): இந்திய வடகிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு பதக்கத்தைப் பெற்று தந்துள்ளது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் கீளின் & ஜெர்க் பிரிவில் பளுவை தூக்க முடியாமல் தலைகுனிந்து வெளியேறினார் மீராபாய் சானு. இந்த பெரும் தோல்வியில் இருந்து வெள்ளியை நோக்கிய பயணம் குறித்து மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.

நாட்டை திருப்திப்படுத்திவிட்டேன்

"பதக்கத்தை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பு என்னை பதற்றமடைய செய்தாலும், என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

வீட்டுக்கு போனும்

2016 ரியோவில் நான் சரியாக விளையாடவில்லை. அந்த போட்டிதான், இன்றைய போட்டிக்கான பாலப்பாடம். எந்த இடத்தில் தவறிழைத்தேன் என்பதை அறிந்தகொண்ட பின், அதை சீர்செய்ய பயிற்சி எடுத்தேன்.

மீராபாய் சானு: 'நேவர் எவர் கிவ் அப்' கதை

நாடு திரும்பியவுடன் நான் முதலில் என் வீட்டிற்குதான் செல்வேன். நான் என் குடும்பத்துடன் நேரம் செலவழித்து சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும். இன்று எந்தத் திட்டமும் இல்லை, ஆனால், இன்றைய நாள் என்னுடைய கொண்டாட்டமான நாள்" என்று சிரித்தபடியே கூறினார்.

பளுவோடு பதக்கத்தையும் தூக்கிவிட்டேன்

நீங்கள் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என நினைத்தீர்களா என்ற கேள்விக்கு," தங்கப்பதக்கம் வெல்ல நான் கடுமையாக முயற்சித்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. இரண்டாம் முறை பளுவை தூக்கும்போது, நான் பதக்கத்தையும் தூக்கிவிட்டேன் என்பதை உறுதி செய்துக்கொண்டேன்" என்றார்.

நீண்ட நாளுக்கு பின் பதக்கம்

இன்றைய போட்டியில் சானு, மொத்தம் 202 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோ, கிளீன் & ஜெர்க் 115 கிலோ) பளுவை தூக்கி, வெள்ளி பதக்கத்தை வென்றார். சீனா வீராங்கனை 210 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்றிருந்தார்.

2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரி பெற்று தந்த வெண்கலத்திற்கு பிறகு, மீராபாய் சானுதான் இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விடாமல் போராடிய சுதிர்தா முகர்ஜி... அடுத்து சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

Last Updated :Jul 25, 2021, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.