ETV Bharat / sports

கடை நிலை டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் உலகின் முன்னணி வீரர்கள்!

author img

By

Published : Apr 20, 2020, 12:56 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ள டென்னிஸ் தொடர்களினால் பாதிப்படைந்துள்ள வீரர்களுக்கு உதவும் வகையில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் அவர்களுக்கு உதவ முற்பட்டுள்ளதாக நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Tennis 'big three' plan to help lowest-ranked players, says Djokovic
Tennis 'big three' plan to help lowest-ranked players, says Djokovic

கோவிட்-19 பெருந்தொற்றுக்காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக விம்பிள்டன், லேவர் கோப்பை, பிரஞ்சு ஓபன் போன்ற மிகமுக்கிய டென்னிஸ் தொடர்களும் அடங்கும்.

இந்நிலையில் டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் கடைநிலை வீரர்களுக்கு உதவுவதற்காக உலகின் முதல் நிலை வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோருடன் கலந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜோகோவிச், 'நான் ஃபெடரர், நடாலுடன் கடந்த சில நாட்களாக பேசினேன். நாங்கள் வருங்கால டென்னிஸ் குறித்த விவாதங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது டென்னிஸின் வருங்காலம் எப்படி இருக்க போகிறது, அதற்கு நாங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி பேசினோம். குறிப்பாக கடைநிலை வீரர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தோம்.

மேலும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக தரவரிசைப்பட்டியலில் 200 முதல் 250 வீரர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு வழங்குகிறது. ஆனால், தரவரிசையில் 700 முதல் 1000 வரையில் உள்ள வீரர்களுக்கு கூட்டமைப்பு சார்பாக எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு ஸ்பான்ஸர்கள் கூட இல்லாமல் அவர்களாகவே அனைத்துப் போட்டிகளுக்கான செலவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 250 முதல் 700க்குள் இருக்கும் வீரர்களே டென்னிஸை விட்டு வெளியேறும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் முதல் நிலை வீரர்களான நாம் அனைவரும் இணைந்து ஒரு சிறிய நிதியுதவியை அவர்களுக்கு அளிப்போம். அதன் படி ஒற்றையர் பிரிவுகளில் தரவரிசை பட்டியலின் அடிப்படையில்,

வீரர்களின் தரவரிசைஅளிக்க வேண்டிய தொகை(ஒருவருக்கு)
1-530,000 டாலர்
5-1020,000 டாலர்
10-2015,000 டாலர்
20-5010,000 டாலர்
50-1005,000 டாலர்

இரட்டையர் தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் தலா ஐந்தாயிரம் டாலரை வழங்கவேண்டும். இதன் மூலமாக சுமார் 1.5 மில்லியன் டாலர் கிடைக்கும். மேலும் ஏடிபியின் பங்களிப்பாக 3 முதல் 3.5 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும், இதனால் கடைநிலை வீரர்களுக்கு நம்மால் உதவமுடிவும்.

இதன் மூலம் நாம் அவர்களை மறக்கவில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டும். மேலும் நிதி நெருக்கடியால் யாரும் டென்னிஸை விட்டு வெளியேறுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்' என்றும் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள டென்னிஸ் வீரர்களான நோவாக் ஜோகோவிச், ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் இந்த முடிவிற்கு பல்வேறு துறையினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:‘தோனிக்கு பிடித்த வீரராக ரெய்னா இருந்தார்’ - யுவராஜ் சிங் பளீச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.