ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்க்கும் டாமினிக் தீம்!

author img

By

Published : Jan 31, 2020, 8:03 PM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார்.

dominic-thiem-beats-alexander-zverev-in-australian-open-semi-final
dominic-thiem-beats-alexander-zverev-in-australian-open-semi-final

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவை எதிர்த்து டாமினிக் தீம் ஆடினார்.

முதல் செட்டின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய ஸ்வெரவ், முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-4 என டாமினிக் தீம் கைப்பற்றி பதிலடி கொடுக்க, ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது.

அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்
அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்

இதையடுத்து நடந்த மூன்றாவது ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது செட் ஆட்டத்தில் தொடக்கத்தில் டாமினிக் தீம் 3 -1 முன்னிலை பெற, அடுத்து நிதானமாக ஆடிய ஸ்வெரவ் 3-4 என முன்னேறினார்.

பின்னர் ஒரு வீரர்கள் சரிக்கு சமமாக ஆடி 6-6 என்ற நிலைக்கு செல்ல, ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. டை ப்ரேக்கரில் 6-3 என வென்ற டாமினிக் தீம், மூன்றாவது செட்டை 7-6 (7-3) எனக் கைப்பற்றினார்.

பின்னர் நடந்த நான்காவது செட் ஆட்டத்திலும் இரு வீரர்களும் போட்டிபோட்டு விளையாட மீண்டும் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதிலும் டாமினிக் தீம் 7-4 எனக் கைப்பற்றி நான்காவது செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

முதல் செட்டை இழந்தாலும், அடுத்த மூன்று செட்களில் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு டாமினிக் தீம் தகுதிபெற்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து டாமினிக் தீம் ஆடவுள்ளார்.

இதையும் படிங்க: மூன்று டை ப்ரேக்கரையும் இழந்த நடால்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/tri-nation-t20-series-harmanpreet-steers-india-women-to-5-wicket-win-against-england/na20200131134241259


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.