ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓப்பன்: அரையிறுதிக்கு முன்னேறிய செரினா, ஜோகோவிக்!

author img

By

Published : Feb 16, 2021, 11:11 PM IST

ஆஸ்திரேலின் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னணி வீரர்களான செரினா வில்லியம்ஸ் மற்றும் நோவாக் ஜோகோவிக் முன்னேறியுள்ளனர்.

Australian Open
Australian Open

2021ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓப்பன் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றையர் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான காலிறுதி ஆட்டம் இன்று(பிப்.16) நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ரோமினிய வீராங்கனை சைமோனா ஹெலப்பை எதிர்கொண்டார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஹெலப்பை வெற்றி கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள செரினா, வரும் வியாழன் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகாவை எதிர்கொள்கிறார்.

அரையிறுதிக்கு முன்னேறிய செரினா

ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், ஆறாம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸான்டர் சேவேரேவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் செட்டை 6-7 (6) என டை பிரேக்கரில் இழந்த ஜோகோவிக், அடுத்த செட்டில் சுதரித்துக் கொண்டு 6-2 எனக் கைப்பற்றினார்.

பின்னர் 6-4, 7-6(8) என அடுத்தடுத்த செட்களை வென்ற ஜோகோவிக் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிக், வரும் வியாழன் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் புதிய புயலான அஸ்லான் கரட்சேவை எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அரையிறுதி; ரஷ்ய வீரர் அபார சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.