ETV Bharat / sports

#SwissIndoors: இரண்டாவது சுற்றிலேயே நடையை கட்டினார் ஸ்வெரேவ்!

author img

By

Published : Oct 23, 2019, 4:48 PM IST

பேசல்: ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6,6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார்.

#SwissIndoors

SwissIndoors: சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஸ்விஸ் இண்டோர் பேசல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொண்டார்.

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்வெரேவ் இறுதியில் தடுமாறினார். இதன்மூலம் முதல் செட்டை டெய்லர் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வெரேவுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதனைத்தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய டெய்லர், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தியதன் மூலம் ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: எம்மாடியோ... நீங்க வேற லெவல்! #FEDERER1500

Intro:Body:

swiss indoor tennis


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.