ETV Bharat / sports

சர்வதேச ஜூடோ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து புடின் அதிரடி நீக்கம்

author img

By

Published : Feb 27, 2022, 7:29 PM IST

Updated : Feb 28, 2022, 6:52 AM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சர்வதேச ஜூடோ அமைப்பின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புடின்
புடின்

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடந்த பிப்.24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று (பிப்.27) நான்காவது நாளாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதலால் இருநாட்டு தரப்பிலும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளன. தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா மீது பல தடைகளையும் உலக நாடுகள் விதித்து வருகின்றன.

இந்தநிலையில், சர்வதேச ஜூடோ அமைப்பின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தற்காலிகமாக நீக்கம் செய்து அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

புடின் ஜூடோ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டத் தடை - கூகுள் அதிரடி!

Last Updated : Feb 28, 2022, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.