ETV Bharat / sports

உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை

author img

By

Published : Feb 4, 2022, 8:38 AM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

விருத்தி குமாரி, Tamil women Boxer Viruthi Kumari won bronze, குத்துச்சண்டை வீராங்கனை விருத்தி குமாரி
விருத்தி குமாரி

சென்னை: உலக அளவிலான குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு அமீரக்கத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 56 நாடுகளிலிருந்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து மொத்தம் 12 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதில், ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலகளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விருத்தி குமாரி என்ற பெண் ஒருவர் மட்டுமே வெண்கலப் பதக்கம் வென்றார்.

'சொந்த செலவில்தான் சென்றோம்'

இதையடுத்து, விமானம் மூலம் சென்னை வந்த அனைத்து தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய வீரர்கள், "மற்ற நாடுகளைப்போல இந்தியாவிலும் அரசு குத்துச்சண்டைப் போட்டிகளை ஊக்குவித்து, குத்துச்சண்டைப் பயிற்சி மையங்களை அமைத்து அதிகப்படியான வீரர்களை உருவாக்க வேண்டும்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலக அளவிலான குத்துச்சண்டை போட்டியில், மற்ற நாடுகளிலிருந்து பங்கேற்ற வீரர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் அவர்களின் அரசு சார்பில் செய்யப்பட்டன. இந்தியா சார்பில் சென்ற 12 வீரர்களும் தங்கள் சொந்த பணத்தைச் செலவுசெய்து சென்றுள்ளோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உலகளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. அரசு மற்ற விளையாட்டுகளுக்கு உதவுவதுபோல் குத்துச்சண்டை விளையாட்டையும் ஊக்கப்படுத்தி வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் அதிகமான குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டிலிருந்து உருவாவார்கள்" என்றனர்.

இதையும் படிங்க: U19 Worldcup 2022: இறுதிப்போட்டியில் இந்தியா; அடங்கியது ஆஸ்திரேலியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.