ETV Bharat / sports

Neeraj Chopra : டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்... வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 9:51 AM IST

Neeraj Chopra Clinches Silver in Diamond League : டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

Neeraj
Neeraj

ஓரிகன் : அமெரிக்காவில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய சார்பில் தங்க மகன் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டியில் 83 புள்ளி 80 மீட்டர் மட்டுமே வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜக்கூப் வடலெஜ்ச் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இறுதி சுற்றில் அவர், 84 புள்ளி 24 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். பின்லாந்தை சேர்ந்த ஆலிவர் ஹெலண்டர் 83 புள்ளி 74 மீட்டர் ஈட்டி எறிந்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அண்மையில் நடைபெற்ற உலக ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் தொடர்களில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து தங்கம் வென்று இருந்தார்.

இந்நிலையில், புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் அவர் சோபிக்கத் தவறியது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விரைவில் ஆசிய கோப்பை விளையாட்டு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதில் நீரஜ் சோப்ரா திறம்பட செயல்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Ind Vs SL : ஆசிய கோப்பை யாருக்கு? இந்தியாவுடன் தாக்குபிடிக்குமா இலங்கை! வேண்டும் வருணபகவான் கருணை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.