ETV Bharat / sports

ரொனோல்டோவின் ஆண் குழந்தை மறைவு!

author img

By

Published : Apr 19, 2022, 10:47 AM IST

ரொனால்டோ தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில், ஆண் குழந்தை மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொனோல்டோவின் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை மறைவு
ரொனோல்டோவின் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை மறைவு

மான்செஸ்டர்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவரது ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதில், ஆண் குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரொனால்டோ - ரோட்ரிக்ஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள பதிவில்,"எங்களுக்கு பிறந்த ஆண் குழந்தை காலமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.

தற்போது பிறந்த பெண் குழந்தை மட்டும் இந்த தருணத்தில் எங்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மிக சிறந்த வகையில் எங்களில் சிகிச்சை அளித்து உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தருணத்தில் நாங்கள் அனைவரும் மனமுடைந்து போயுள்ளோம். எனவே, இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த ஆண் குழந்தையை தேவதை என்றுரொனால்டோ தம்பதி தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோவின் குழந்தை மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரொனால்டோ தம்பதிக்கு முன்பே 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாதிக்கவேண்டிய இளம்புயல்... காலம் நிகழ்த்திய கோலம்... யார் இந்த விஷ்வா தீனதயாளன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.