ETV Bharat / sports

கோல்டன் ஃபுட் விருதை வென்றார் ரொனால்டோ!

author img

By

Published : Dec 21, 2020, 5:53 PM IST

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்தாண்டிற்கான கோல்டன் ஃபுட் விருதை கைப்பற்றினார்.

Watch: Ronaldo Scoops 2020 Golden Foot Award
Watch: Ronaldo Scoops 2020 Golden Foot Award

உலகின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இவர் சீரி ஏ கால்பந்து தொடரில் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போதைய கால்பந்து ஜாம்பவான்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ரொனால்டோ இதுவரை ஐந்து முறை பாலன் டி ஓர் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

கோல்டன் ஃபுட் விருது

இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இந்தாண்டின் கோல்டன் ஃபுட் விருது கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று நாடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இவ்விருதை மொனாகோ இளவரசி ஸ்டீபனியின் மகன் லூயிஸ் டக்ரூட், ரொனால்டோவிற்கு வழங்கினார்.

கோல்டன் ஃபுட் விருதை வென்றார் ரொனால்டோ

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்தடம் மற்றும் கையெழுத்து அச்சுகள் பதிவுசெய்யப்படன.

இவை மாண்டோ கார்லோவில் உள்ள சாம்பியன்ஸ் ப்ரெமனேட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரிட்டீஷ் பிரீமியர் லீக் : வெற்றியுடன் தொடங்கிய முர்ரே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.