ETV Bharat / sports

ஐஎஸ்எல்: முதல் வெற்றிக்காக போராடும் கோவா; தோல்வியைத் தவிர்க்கும் முனைப்பில் நார்த் ஈஸ்ட்

author img

By

Published : Nov 30, 2020, 5:38 PM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் எஃப்சி கோவா அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ISL 7: FC Goa eye season's first win against NorthEast United
ISL 7: FC Goa eye season's first win against NorthEast United

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சென்னை எஃப்சி - கோவா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கோலேதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இத்தொடரில் எஃப்சி கோவா அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில், ஒன்றில் தோல்வியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கோடு எஃப்சி கோவா அணி இன்றைய போட்டியில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதேசமயம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, இந்த சீசனில் இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியையும், ஒரு போட்டியை டிராவிலும் முடித்துள்ளது. நடப்பு சீசனில் தோல்வியைத் தழுவாமல் இருந்து வரும் நார்த் ஈஸ்ட் அணி, இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:அதிகவேக சதம் அடித்த பிலிப்ஸ்... வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரை வென்ற நியூசி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.