ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக்: ஜுவென்டஸை பந்தாடியது எஃப்சி போர்டோ!

author img

By

Published : Feb 18, 2021, 1:53 PM IST

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜுவென்டஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி போர்டோ அணி வீழ்த்தியது.

Fast start sees Porto stun Juventus 2-1 in Champions League
Fast start sees Porto stun Juventus 2-1 in Champions League

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்திவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று (பிப். 18) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, எஃப்சி போர்டோ அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே போர்டோ அணியின் மெஹதி தரேமி கோலடித்து ஜுவென்டஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவிலேயே எஃப்சி போர்டோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய போர்டோ அணிக்கு மௌசா மரேகா கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார். ஆட்டத்தின் இறுதிவரை போராடிய ஜுவென்டஸ் அணிக்கு 82ஆவது நிமிடத்தில்தான் முதல் கோல் கிடைத்தது.

பின்னர் ஆட்டநேர முடிவில் எஃப்சி போர்டோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது.

இதையும் படிங்க: ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ இனி ‘பஞ்சாப் கிங்ஸ்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.