ETV Bharat / sports

கால்பந்து: ஓய்வை அறிவித்த முன்னாள் பார்சிலோனா வீரர்!

author img

By

Published : Nov 13, 2019, 4:35 PM IST

ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவரும் ஜ லீக் தொடர் முடிவடைந்ததுடன் தான் அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக முன்னாள் பார்சிலோனா வீரர் டேவிட் வில்லா அறிவித்துள்ளார்.

David

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்லா கால்பந்து அரங்கில் 2008 முதல் 2012 வரையிலான காலக்கட்டங்களில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஸ்பெயின் அணி 2008, 2012 என அடுத்தடுத்து யூரோ கோப்பை வென்றதற்கும், 2010இல் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை முதல் முறையாக வென்றதற்கும் இவர் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

ஸ்பெயின் அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி 59 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அந்நாட்டு அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

லா லிகா தொடரில் வலென்சியா, பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். குறிப்பாக, 2010 முதல் 2013 வரை இவர் பார்சிலோனா அணிக்காக மூன்று சீசன்களிலும் விளையாடி மூன்று லா லிகா, மூன்று கோபா டெல்ரே, ஒரு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல துணையாக இருந்தார்.

அதன்பின், 2015 முதல் அமெரிக்காவின் மேஜர் சாக்கர் லீக் தொடரில் நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிய இவர், இந்த சீசனில் ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜ லீக் தொடரில் விசேல் கோபே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்ப்டடார்.

  • After 19 years as a professional, I have decided to retire from playing football at the end of this season. Thank you to all the teams, coaches and teammates that have allowed me to enjoy this dreamed career. Thank you to my family, that has always been there to support me. pic.twitter.com/E82vb3tNwT

    — David Villa (@Guaje7Villa) November 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது 37 வயதான இவர், ஜ லீக் தொடர் முடிவடைந்தவுடன் தான் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், 19 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகள் விளையாடிய பிறகு தற்போது ஓய்வு பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். எஎனக்கு ஆதரவு தந்த குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டார்.

ஜ லீக் தொடரில் 26 ஆட்டங்களில் விசேல் அணிக்காக விளையாடிய இவர் இதுவரை 12 கோல்களை அடித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.