ETV Bharat / sports

விராட் கோலியின் 100-ஆவது டெஸ்ட் -இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!

author img

By

Published : Mar 4, 2022, 9:07 AM IST

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் மொகாலியில் இன்று(மார்ச்.04) தொடங்குகிறது.

இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று(மார்ச்.04) தொடங்குகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-ஆவது டெஸ்ட் என்பதாலும், ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் டெஸ்ட் என்பதாலும் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிர் கூட்டணி தங்கம் வென்று அசத்தல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.