ETV Bharat / sports

India vs Pakistan : இந்திய அணியில் சுப்மான் கில்? ரோகித் சர்மா பளீச்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 12:24 PM IST

World Cup Cricket :பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இடம் பெற 99 சதவீத வாய்ப்பு இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

rohit sharma
rohit sharma

அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 13) நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டின் ஹை லோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண ஆவல் கொண்டு உள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முன்னதாக நரேந்திர மோடி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியில் சுப்மான் கில் இணைய 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும், போட்டி நடைபெறும் அன்று தெரிய வரும் என்று கூறினார்.

உடற்தகுதியை சோதனை செய்ய கடந்த வியாழக்கிழமை இந்திய அணியின் துணைக் குழுவுடன் சுப்மான் கில் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டதாக ரோகித் சர்மா கூறினார். கடந்த புதன்கிழமை அகமதாபாத் மைதானத்திற்கு சுப்மான் கில் விரைந்த நிலையில், அன்று மாலை மற்றும் வியாழக்கிழமை முக கவசம் அணிந்து பயிற்சி மேற்கொண்டதாகவும், அதன் பின் இந்திய அணி வீரர்களுடன் பயிற்சி செய்ததாகவும் அவர் கூறினார்.

ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின், வேகத்திற்கு ஈடுகொடுத்து பவுண்டரிகளை விளாசிய சுப்மான் கில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இருப்பது அவசியமாக கருதப்படுகிறது என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

அணியின் தேவைக்கேற்ப மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று ரோகித் சர்மா கூறினார். ஆடுகளத்தை பொறுத்து விளையாட விரும்பும் எந்த கலவைக்கும் வீரர்கள் தயாராக இருப்பதாகவும், எந்த மாதிரியான சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பதைப் பொறுத்து அதுவே ஒரு அணி முன்னோக்கி செல்ல சவாலாக அமையும் என்றும் ரோகித் சர்மாகூறினார்.

அணியில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டால், அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுபோன்ற மாற்றங்கள் குறித்து இந்திய வீரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அணியில் குறிப்பிட்ட வீரரின் இருப்பு இல்லாத போது மற்ற வீரர்களுடன் எந்த பிரச்சனையும் இருக்காது என தான் நினைப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஆட்டத்தின் தேவையை பொறுத்து அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திரன் ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடுவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : India vs Pakistan : சாதனையை தக்கவைக்குமா இந்தியா? வரலாறு படைக்குமா பாகிஸ்தான்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.