ETV Bharat / sports

இந்தியா vs ஆஸ்திரேலியா; வெற்றியை தீர்மானிப்பது எது? - ராகுல் டிராவிட் பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 9:30 PM IST

Updated : Oct 6, 2023, 10:59 PM IST

Asian Games Cricket 2023: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் என்பதனால், அவர் தொடர் மருத்துவ கண்காப்பில் இருப்பதாக கூறிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வெற்றியை தீர்மானிப்பது மைதானமோ அல்லது முதலில் பேட்டிங் மற்றும் பில்டிங் செய்துவது யார்? என்பதும் இல்லையெனவும் திறமையான ஆட்டத்தின் மூலம் வெற்றி தீர்மானிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உலகமே எதிர்பார்த்த ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 தொடர் நேற்று ஆரம்பித்தது. நவ.19 வரை நடக்கும் இப்போட்டியை இந்தியா இந்த முறை தலைமையேற்று நடத்துகிறது. அதிகமான கிரிக்கெட் ரசிகர்களை கொண்டது, இந்தியா. இருப்பினும், இந்த ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 -ஐ உலகத்தில் உள்ள பிற கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடுகின்றனர். இந்தியாவின் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 மாநகரங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய அணிக்கான முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா vs ஆஸ்திரேலிய அணிகள் (India vs Australia) பலப்பரீச்சை செய்கின்றன. இதற்கான பயிற்சி ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று (அக்.6) சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் என்பதனால், அவர் தற்போது தொடர் மருத்துவ கண்காப்பில் இருக்கிறார். நான் கிரிக்கெட் விளையாடி பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது கிரிக்கெட் வீரர் என என்னை நான் கூறிக்கொள்வதில்லை. தொடர்ந்து, இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

ஒரு பயிற்சியாளாராக என்னால், ஒரு ரன் அல்லது ஒரு விக்கெட் கூட எடுப்பது இயலாது. ஆனால், என்னுடைய அணிக்கும் எப்படி விளையாடுவது, என்பதை ஆலோசனை வழங்கி வருகிறேன். மேலும், அணிக்கு உறுதுணையாக இருக்க முடியும். கிரிக்கெட் விளையாட்டில் மைதானம் என்பது முக்கியம் இல்லை; யார் முதலில் பந்து வீச்சையும், பில்டிங்கையும் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதிலும் அணியின் வெற்றி இல்லை. கிரிக்கெட் வீரர்களின் திறமையான ஆட்டமும், அணியின் சிறப்பான செயல்பாடுகளுமே வெற்றியை தீர்மானிக்கும். மேலும், விளையாடும் மைதானத்தை நாம் புரிந்துக் கொண்டு, திறமையாக விளையாட வேண்டும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில், பல்வேறு நகரங்களில் உள்ள பல்வேறு மைதானங்களில் போட்டியானது நடைபெறுகிறது, இதில் ஒவ்வொறு மைதானதில்லும் ஒவ்வொறு சவலால்கள் நிறந்தாகவே இருக்கிறது, வீரர்கள் அதற்கு ஏற்றது போல், அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் ஒவ்வொறு ஆட்டத்திலும் ஸ்குவாட் வீரர்களை மாற்றம் செய்து தனித்துவமனா ஆட்டத்தை, அதாவது, வீரர்களை மாற்றி அமைத்து, அதற்கு ஏற்றது போல் விளையாடுவதால், வெவ்வேறு, மைதானங்களில் தனித்துவமான ஆட்டமான வெளிப்படும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள், டி-20 போட்டிகள், விளையாடி உள்ளோம். மேலும், நாங்கள், தொடர்ந்து, பேட்டிங்க், மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறோம், நடுவில் ஆடும் வீரர்களை விட்கெட் முக்கியமானதாக தற்போது இருக்கிறது. அதற்காக பந்துவீச்சில் கவனம் செல்லுத்தி வருகிறோம்.

இந்தியாவின் பல நகரங்களில் உள்ள பலதரப்பட்ட மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் சில மைதானங்கள் சவால்கள் நிறைந்தவை என்பதால், வீரர்கள் அதற்கேற்ப சிறப்பாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது. மேலும் ஒவ்வொறு ஆட்டத்திலும் ஸ்குவாட் வீரர்களை மாற்றம் என்று சொல்லக்கூடிய வீரர்களை மாற்றி அமைத்து விளையாடுவதன் மூலம் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா விளையாட்டு பற்றி ராகுல் கருத்து?

தொடர்ந்து ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகள் உள்ளிட்டவைகளில் விளையாடி உள்ளோம். மேலும், தொடர்ந்து பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறோம். நடுவில் ஆடும் வீரர்களின் விட்கெட்கள் முக்கியமானதாக தற்போது உள்ளது. அதற்காக பந்துவீச்சில் கவனம் செல்லுத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார். நியூசிலாந்து அணியில் உள்ள இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா நேற்று இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டியில் சிறப்பாக விளையாடினார். 96 பந்துகளில் 11 ஃபோர்கள், 5 சிக்ஸ்கள் என 123 ரன்கள் குவித்தார். இதற்கு காரணம் உங்களின் வழிகாட்டலா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு பின்னால், எனது பெயரில்லை. நான் அது போல் கவர் டிரைவ் விளையாடியது, மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினாக கூட காரணம் இருக்காலம்' என பதிலளித்தார்.

இதையும் படிங்க: Asian Games Cricket 2023: இறுதி போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணி மோதல்!

Last Updated : Oct 6, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.