ETV Bharat / sports

சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கும் தோனி.. ஜடேஜாவின் ஸ்பெஷல் கிப்ட் என்ன?

author img

By

Published : Apr 12, 2023, 1:22 PM IST

இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி 200வது போட்டியில் களமிறங்குகிறார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 16வது ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகளை வென்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெரும் முனைப்போடு களமிறங்குகின்றன.

இன்று வெற்றி பெரும் பட்சத்தில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அதே வேளையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெரும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்திற்கு முன்னேறும். சென்னை ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

சென்னை அணிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனா இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சென்னை பேட்டிங்கை பொறுத்தவரைக் கடந்த போட்டியில் ரஹானேவின் அதிரடி ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இன்றும் ரஹானேவின் அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கயிக்வாட் நல்ல பார்மில் உள்ள நிலையில் மொயின் அலி, ராயுடு கை கொடுக்கும் பட்சத்தில் சென்னை அணியின் பேட்டிங் அசுர பலத்துடன் காட்சியளிக்கும்.

அதேவேளையில் ராஜஸ்தான் அணி பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாஸ் பட்லர், ஜெயிஷ்வால் ஆகியோரை பெரிதும் நம்பியுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிரடி காட்டும் பட்லர் எதிரணி பவுலர்களுக்குச் சிம்ம சொப்பணமாக திகழ்கிறார். இன்றும் பட்லர் அதிரடி தொடரும் பட்சத்தில் ராஜஸ்தான் எளிதில் வெற்றியை ருசிக்க வாய்ப்புண்டு.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சஹால் வீசும் 4 ஓவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி 200 போட்டியில் களமிறங்குகிறார். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ’இன்றைய போட்டியின் வெற்றியை தோனிக்கு பரிசளிப்போம்’ என கூறியுள்ளார். மேலும் இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெறப் போவதாகவும் கூறப்படுகிறது. இன்று தோனியின் 200வது போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணியின் வெற்றி பயணம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: DC VS MI : முதல் வெற்றியை போராடி பெற்ற மும்பை அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.