ETV Bharat / sports

தோனி தலைமையில் துபாய்க்கு பறந்த சிஎஸ்கே!

author img

By

Published : Aug 13, 2021, 3:50 PM IST

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று (ஆக. 13) தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டனர்.

சென்னை விமான நிலையம், சென்னை சூப்பர் கிங்ஸ், chennai airport, chennai super kings, chennai, msd, dhoni, dubai flight, csk to dubai
தோனி தலைமையில் துபாய்க்கு பறந்த சிஎஸ்கே

சென்னை: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. பயோ-பபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில், சில அணிகள் அகமதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் பயோ-பபுளில் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று காலை துபாய் புறப்பட்டது.

கிங்ஸ் பயணம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் தோனி தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் துபாய் நாட்டிற்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிஎஸ்கே வீரர்கள்

அந்த வகையில், கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், கரன் சர்மா, கேஎம் ஆசிப் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஓய்வுபெற்று ஓராண்டு...

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் தாங்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தனர். அதன்பின்னர், இருவரும் ஐபிஎல் தொடரில்தான் விளையாடிவருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்க இருக்கிறது.

இதையும் படிங்க: பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.