ETV Bharat / sports

ஐபிஎல் தொடர் தள்ளிவைப்பு - சொந்த நாடுகளுக்கு திரும்பினர் பட்லர், பேர்ஸ்டோ

author img

By

Published : May 5, 2021, 10:57 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் எட்டு பேர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்து இரு நாள்களுக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் உள்பட மேலும் சில வீரர்கள் புறப்படவுள்ளனர்.

ipl players return home
சொந்த நாடுகளுக்கு திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்

லண்டன்: ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ உள்பட எட்டு இங்கிலாந்து வீரர்கள் இன்று (மே 5) நாடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் நடப்பு சீசன் கரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் நான்கு பேர் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான நிலையில், கடந்த ஏப்ரலில் தொடங்கி நடைபெற்று வந்த தொடரானது நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதையடுத்து தற்போது ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் இவ்வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சாம் கர்ரண், மொயீன் அலி,டாம் கர்ரண், கிறிஸ் வோக்ஸ், ஜேசன் ராய், உள்ளிட்டோர் இங்கிலாந்துக்கு இன்று திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்து இரு நாள்களுக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது சென்றுள்ள வீரர்கள் அனைவரும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் 10 நாள்கள்வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியே நாட்டின் அரசாங்கமும் இந்திய நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்திருப்பதால் அந்நாட்டு வீரர்கள் மாலத்தீவு அல்லது இலங்கை சென்று பின்னர் அங்கிருந்து தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வீரர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்புடன் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.