ETV Bharat / sports

புள்ளிகள், ரன் ரேட் இரண்டிலும் ஒரே நிலையில் இருந்தால், எப்ப்டி ப்ளே ஆஃப் தேர்வு நடக்கும்?

author img

By

Published : Nov 2, 2020, 8:13 PM IST

கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி அல்லது ஆர்சிபி ஆகிய அணிகள் ஒரே ரன் ரேட்டில் இருந்தால் எப்படி ப்ளே ஆஃப் வாய்ப்பு வழங்கப்படும் என்பது பற்றி ஐபிஎல் விதிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

ipl-2020-what-happens-if-teams-are-locked-on-points-net-run-rate
ipl-2020-what-happens-if-teams-are-locked-on-points-net-run-rate

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் ரயிலில் மும்பை அணி மட்டுமே ஏறியுள்ள நிலையில், இன்று நடந்து வரும் டெல்லி - ஆர்சிபி இடையேயான போட்டியின் மூலம் இரண்டாவது இடத்திற்கான அணியை தெரிந்துகொள்ளலாம். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் போட்டியிடுகின்றன.

இதனிடையே நாளை நடக்கவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால், கொல்கத்தா, ஆர்சிபி அல்லது டிசி ஆகிய அணிகளும் 14 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் நிறைவு செய்யும். இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணியை கால்குலேட்டர் வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

ஆர்சிபி
ஆர்சிபி

ஐபிஎல் 16.10.2.1 விதியின்படி, அதிக வெற்றிகளைப் பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஒருவேளை ஒரே அளவிலான வெற்றிகளை இரு அணிகளும் பெற்றிருந்தால், ரன் ரேட் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

ஐபிஎல் 16.10.2.2 விதியின்படி, இரு அணிகள் ஒரே அளவிலான வெற்றிகளைப் பெற்று, ஒரே புள்ளிகளில் இருந்தால், ரன் ரேட் அடிப்படையில் யார் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். ஒருவேளை ரன் ரேட்டும் ஒரே அளவில் இருந்தால், எந்த அணி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது என்பது கணக்கீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.

கொல்கத்தா
கொல்கத்தா

ஐபிஎல் 16.10.2.3 மற்றும் 16.10.2.4. ஆகிய விதியின் படி ஒருவேளை ரன் ரேட், விக்கெட்டை ஆகியவையும் இரு அணிகளுக்குள் சரிசமமாக இருந்தால், சரியாக வீசப்பட்ட பந்துகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அணி எதுவோ, அந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு வழங்கப்படும். அதுவும் சரிசமமாக இருந்தால், குலுக்கல் முறை பயன்படுத்தப்படும்.

இதையும் படிங்க: #ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.