ETV Bharat / sports

இந்தியா அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தமே - உலக கோப்பை அணி குறித்து நடராஜன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:25 PM IST

Indian cricket player Natarajan: ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தமே என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கூறியுள்ளார்.

நடராஜன்
Natarajan

இந்தியா அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தமே - நடராஜன்

சேலம்: ஐசிசி நடத்தும் 13வது ஒருநாள் உலக கோப்பை வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையானது இந்தியாவில் 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தனது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அணிகள் தேர்வு குறித்து கிரிக்கெட் உலகில் விமர்சனங்கள் அரங்கேறி வருகின்றன.

மேலும், உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பலர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணி உலக கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளர்.

சேலத்தில் தனியாருக்கு சொந்தமான மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் விற்பனை நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இன்று (செப்டம்பர் 11) துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்; “ உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியை சிறப்பாக தேர்வு செய்துள்ளனர். இந்திய அணியில் இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் என அனைவரும் கலந்துள்ளனர். இந்தியாவில் நடைபெறுவதால் அதற்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: US Open Tennis: அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல்முறையாக மகுடம் சூடிய கோகோ காஃப்..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவாலான அணியாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் இருந்தாலும், இந்தியாவில் நடைபெறுவதாக நமக்கு அது சாதகமாக இருக்கும். இந்தியா அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரையும் போல் நானும் உலக கோப்பையை நோக்கி ஆர்வமாக உள்ளேன் என்றார்.

மேலும், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் அடுத்த தலைமுறை வீரர்களை வளர்த்து வருகின்றனர். இதனால் இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் அணிக்குள் தேர்வாகி வருகின்றனர். இளம் வீரர்கள் அவர்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதன் மூலம் இந்தியா அணியில் தேர்வாவதில் நல்ல வாய்ப்பு இருக்கிறது.

உலக கோப்பைக்கான இந்தியா அணியில் தமிழக வீரர் இடம் பெறாதது வருத்தமே. தமிழக வீரர்களின் ஒருவராவது உலகக்கோப்பை அணியில் பங்கேற்று வந்தனர். ஆனால் இம்முறை இல்லாதது எனக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வருத்தமாக தான் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: US Open 2023 : ஜோகோவிச் சாம்பியன்! 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.