ETV Bharat / sports

Ind Vs Aus : தொடர் யாருக்கு? 4வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 6:01 AM IST

India Vs Australia 4th T20 : தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (டிச. 1) களம் காணுகின்றன.

Cricket
Cricket

ராய்ப்பூர் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்றது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

விசாகபட்டினத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கொண்டு வந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (டிச. 1) நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முழு வீச்சில் செயல்ப்பட்டாலும் கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் கோட்டைவிட்டது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி நிச்சயம் முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையால் திலக் வர்மாவின் இருப்பிடம் கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல், இன்றைய ஆட்டத்தில் மாற்று வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 3 ஆட்டங்களில் களம் காணாத வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர் உள்ளிட்டோரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேநேரம், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி பழைய பார்முக்கு மீண்டும் வந்து உள்ளது. கடந்த ஆட்டதில் மேத்யூ வேட் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை பறித்தனர்.

இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் கோலோச்ச துடிப்பார்கள். அதை இந்திய வீரர்கள எளிதாக கையாண்டு வெற்றி வாகையை சூட வேண்டும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், அதேநேரம் தொடரில் தொடர இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா : மேத்யூ வேட் (c & wk), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், கிறிஸ் கிரீன், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் பிலிப்

இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை தொடர்: வரலாற்றில் முதல் முறையாகத் தகுதி பெற்ற உகாண்டா அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.