ETV Bharat / sports

ஆக்ரோஷமான ஆட்டம்.. மற்ற அணிகளுக்கு முன்னொடி.. ரோகித் சர்மா குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் ஜக்தலே கருத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 9:29 PM IST

World Cup 2023: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான சஞ்சய் ஜக்தலே ஈடிவி பாரத் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உலகக் கோப்பையில் இந்தியாவின் ஆட்டம் குறித்தும், இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ளார்.

முன்னாள் வீரர் சஞ்சய் ஜக்தலே
முன்னாள் வீரர் சஞ்சய் ஜக்தலே

ஹைதராபாத்: உலகக் கோப்பையில் இந்தியாவின் ஆட்டம் குறித்தும், இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்தும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான சஞ்சய் ஜக்தலே ஈடிவி பாரத் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி வழங்கியுள்ளார்.

அந்த பேட்டியில், “இந்திய அணியின் பவுலிங் அனைத்து சூழலிலும் நன்றாக செயல்படுகிறது. கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதால் இந்திய அணியின் சமநிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் நன்றாக விளையாடியுள்ளது. இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்கின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் இந்த உலகக் கோப்பையில் அனைத்து வீரர்களுக்கும் முன்னொடியாக திகழ்கிறார். பேட்டிங் மட்டுமில்லாமல் கேப்டனாகவும் அற்புதமாக செயல்படுகிறார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக ரன்கள் சேர்ப்பதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களால் சற்று நிதானமாக விளையாட முடிகிறது.

ரோகித்தின் அதிரடியான பேட்டிங்கால் பந்து இலகுவாக மாறி பின்வரும் பேட்ஸ்மென்களால் எளிதாக ரன்கள் சேர்க்க முடிகிறது” என கூறினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 243 ரன்கள் இமாலய வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரவீந்திர ஜடேஜா குறித்து பேசிய ஜக்தலே, “ ஜடேஜா இந்திய அணிக்கு ஒரு ஸ்பெஷல் வீரராவார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்து வருகிறார்.

ஜடேஜா இருப்பது இந்திய அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது” என்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி குறித்து பேசிய ஜக்தலே, “இந்திய அணி முதல் 10 ஓவர்களிலேயே போட்டியை தன் வசப்படுத்தியது. தென் ஆப்பிரிக்கா அணி எப்போதும் சேசிங்கின் போது தடுமாறும். இந்திய அணி நேற்று 300 ரன்களுக்கு மேல் அடித்தது வெற்றி வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியது.

இங்கிலாந்து அணியின் ஆட்டம் இந்த உலகக் கோப்பையில் மிகவும் மோசமாக உள்ளது. இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்தியாவில் விளையாடிய நல்ல அனுபவம் உள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர்கள் யாரும் ஃபார்மில் இல்லை” என சஞ்சய் ஜக்தலே கூறியுள்ளார்.

இதையும் படிங்க: BAN VS SL: அசலங்கா அபார சதம்… வங்கதேசம் வெற்றி பெற 280 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.