ETV Bharat / sports

PAK VS BAN: 2 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:36 PM IST

Updated : Oct 31, 2023, 2:25 PM IST

World Cup Cricket 2023 : 3 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

PAK VS BAN
PAK VS BAN

கொல்கத்தா : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (அக். 31) நடைபெறும் 31 லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.

வங்கதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்து உள்ளது. ஷாஹீன் அப்ரிடியின் அபார பந்துவீச்சில் வங்கதேசம் அணி ஆட்டம் கண்டு உள்ளது. 3 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

அணியின் வீரர்கள் பட்டியல் :

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், இப்திகார் அகமது, சவுத் ஷகீல், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹரிஸ் ரவுப், உசாமா, மிர், ஹசன் அலி ஃபகார் ஜமான், ஆகா சல்மான்.

பங்களாதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், நசும் அஹ்மத் மஹ்ரி, நசும் அஹ்மத் மஹ்ரி , தன்சிம் ஹசன் சாகிப்.

இதையும் படிங்க: சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருது.. 8வது முறையாக வென்ற மெஸ்ஸி!

Last Updated :Oct 31, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.