ETV Bharat / sports

விலகும் ரவி சாஸ்திரி... என்ட்ரி தருகிறாரா ராகுல் டிராவிட்?

author img

By

Published : Aug 11, 2021, 12:57 PM IST

டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையுடன் அணியிலிருந்து விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பயிற்சியாளர்கள் கூண்டோடு மாற்றம்?

ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் அணியிலிருந்து விலகப் போவதாக பிசிசிஐ வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியுடன் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடியவுள்ளது.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

இந்நிலையில், மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் அணியிலிருந்து தான் விலகப் போவதாக பிசிசிஐ உறுப்பினர்கள் சிலரிடம் ரவி சாஸ்திரி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017ஆம் ஆண்டு முதல் அணியின் முழு நேரப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் என்ட்ரி?

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

ரவி சாஸ்திரிக்குப் பின் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகள் தற்போது அடிபடத் தொடங்கியுள்ளன. ’இந்தியா U-19’, ’இந்தியா-ஏ’ அணிகளுக்கு டிராவிட் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.