ETV Bharat / sports

'புத்தாண்டு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்' - 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இந்தியா!

author img

By

Published : Jan 2, 2021, 3:36 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 06ஆம் தேதிமுதல் 11ஆம் தேதி வரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Watch: 'Renewed' Rahane-led squad sweat it out to prepare for 3rd Test
Watch: 'Renewed' Rahane-led squad sweat it out to prepare for 3rd Test

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்ற நிலையில், வரும் 7ஆம் தேதி சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் அதிரடி வீரர் ரோஹித் சர்மா, ‘யார்க்கர் கிங்’ நடராஜன் ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியின் கேப்டனாக ரஹானேவும், துணைக்கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்னில் இந்திய அணி தீவிர பயிற்சி பெற்றுவரும் காணொலியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது குறித்த பிசிசிஐயின் ட்வீட்டில், “புத்தாண்டு, புதுப்பிக்கப்ப்பட்ட ஆற்றல்” என்று பதிவிட்டு, இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெரும் காணொலியை இணைத்துள்ளது. பிசிசிஐயின் இக்காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: அஜிங்கியா ரஹானே (கே), ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்), மயாங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல். ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், நடராஜன் தங்கராசு.

இதையும் படிங்க:சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.