ETV Bharat / sports

'மும்பையின் பிராட்மேன் சுனில் கவாஸ்கர்’ - ரவி சாஸ்திரி

author img

By

Published : Jan 6, 2021, 10:17 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் உருவப்படம் ஆஸ்திரேலியாவின் பவுரல் அருங்காட்சியகத்தில் (Bowral Museum) வைப்பதற்காக இன்று வெளியிடப்பட்டது.

WATCH | In his prime, Gavaskar was called the Mumbai Bradman: Ravi Shastri
WATCH | In his prime, Gavaskar was called the Mumbai Bradman: Ravi Shastri

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் உருவப்படம், ஆஸ்திரேலியாவின் பவுரல் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக இன்று வெளியிடப்பட்டது.

இதனை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெளியிட்டார். அதன்பின் சுனில் கவாஸ்கர் மும்பையின் பிராட்மேன் என்றும் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, "நான் பார்த்ததில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர்தான். அவருக்கு கீழ் விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்.

அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அடித்த 13 சதங்களே, அவரைப் பற்றி எடுத்துரைக்கும். இதனால் நான் அவரை மும்பையின் பிராட்மேன் என்று அழைப்பேன். என்னைப் பொறுத்தவரை இது நான் அவருக்கு அளிக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகச் செயல்பட்ட சுனில் கவாஸ்கர், இந்திய அணிக்காக 125 டெஸ்ட், 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கபில்தேவ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.