ETV Bharat / sports

10 கோடி பாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் - கோலிக்கு மற்றொரு மகுடம்!

author img

By

Published : Mar 2, 2021, 4:31 PM IST

இந்திய அளவிலும், உலக அளவிலும் இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்ஸைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

Virat Kohli joins elite list, becomes first cricketer to reach 100 million Instagram followers
Virat Kohli joins elite list, becomes first cricketer to reach 100 million Instagram followers

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்தும், பல சாதனைகளை முறியடித்தும் வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டைத் தாண்டி விராட் கோலி உலக அளவில் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அவரது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்ஸை நேற்று விராட் கோலி பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகில் 10 கோடி இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர், மற்றும் இந்திய அளவில் 10 கோடி பாலோயர்ஸைக் கடந்த முதல் இந்தியர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்ஸை கொண்ட நபராக போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். ரொனால்டோவுக்கு 26.60 கோடி பாலோயர்ஸ் உள்ளனர். அதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற பாடகர் அரியானா கிராண்டே 22.40 கோடி பேரும், மல்யுத்த வீரர் ‘தி ராக்’ ஜான்ஸனை 22 கோடி பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விராட் கோலி தற்போதுள்ள ‘மாடர்ன் டே ஹீரோ’ - ஸ்டீவ் வாக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.