ETV Bharat / sports

ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்து சாதனை படைத்த சர்ஃபராஸ் கான்!

author img

By

Published : Feb 4, 2020, 8:02 PM IST

ராஜ்கோட்: மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Sarfaraz finally dismissed, joins elite 1st class cricket list
Sarfaraz finally dismissed, joins elite 1st class cricket list

இந்திய யு-19 அணியின் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் கான், சிலகாலம் ஃபார்மின்றி தவித்து வந்தார். இந்த வருட ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்கியபோது தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திவருகிறார்.

உத்தரப் பிரதேச அணியிலிருந்து மும்பை அணிக்கு திரும்பியபோது, சொந்த மண்ணில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக மும்பை பேட்ஸ்மேன்கள் திணறினர். அப்போது களமிறங்கிய இளம் வீரர் சர்ஃபராஸ் கான் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 301 ரன்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து அடுத்தப் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியதோடு ஆட்டமிழக்காமல் 226 ரன்களை எடுத்தார்.

சர்ஃபராஸ் கான்
சர்ஃபராஸ் கான்

பின்னர் இன்று நடந்த சவுராஷ்ட்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 600 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து சர்ஃபராஸ் கான் அசத்தியுள்ளார்.

மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 605 ரன்களை சர்ஃபராஸ் கான் பதிவு செய்துள்ளார். முன்னதாக 1947/48ஆம் ஆண்டில் கேசி இப்ராஹிம் என்ற வீரர் 709 ரன்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் கிரேம் ஹிக் 645 ரன்களுடன் இரண்டாமிடத்திலும், 1941/42ஆம் ஆண்டில் விஜய் மெர்சண்ட் 643 ரன்களுடன் மூன்றாமிடத்திலும், 1929/30ஆம் ஆண்டில் மிடில்செக்ஸ் அணிக்காக பாட்ஸி ஹெண்ட்ரென் 630 ரன்களுடன் நான்காம் இடத்திலும், தமிழ்நாடு வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் 625 ரன்களுடன் ஐந்தாம் இடத்திலும், பங்கஜ் தர்மானி 608 ரன்களுடன் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க: லாரஸ் விருது: டாப் 5 பட்டியலில் இடம்பெற்ற சச்சின்!

Intro:Body:

Sarfaraz finally dismissed, joins elite 1st class cricket list


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.