ETV Bharat / sports

‘பேர்ஸ்டோவை தொடக்க வீரராக களமிறக்கலாம்’ - ஸ்டீவ் ஹார்மிசன்

author img

By

Published : Feb 17, 2021, 12:11 PM IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவைத் தொடக்க வீரராக களமிறக்கலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

IND vs ENG, 3rd Test: 'England may experiment with Jonny Bairstow opening the batting'
IND vs ENG, 3rd Test: 'England may experiment with Jonny Bairstow opening the batting'

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வூட், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இப்போட்டியில் ஜானி பேர்ஸ்டோவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்
முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்

இது குறித்து பேசிய ஹார்மிசன், “இங்கிலாந்து டெஸ்ட் அணியின் டாப் ஆர்டரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். ஏனெனில் தற்போது தொடக்க வீரர்களாக களமிறங்குவோர் தொடர்ந்து சொதப்பிவருவதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: ஆஷ்லேவுக்கு அதிர்ச்சியளித்த முச்சோவா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.