ETV Bharat / sports

பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பெயர் பரிந்துரை!

author img

By

Published : Nov 24, 2020, 7:21 PM IST

கடந்த பத்தாண்டுகளில் சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விளங்கிய விரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது.

ICC nominates Kohli, Ashwin for Men's Player of the Decade Award
ICC nominates Kohli, Ashwin for Men's Player of the Decade Award

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரை தேர்வு செய்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதன் படி 2011- 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

ஐசிசியின் பத்தாண்டுகளில் சிறந்த விளங்கிய வீரர்/ வீராங்கனை விருதுகான பட்டியலில், ஆடவர் பிரிவில் இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் பெயரையும், மகளிர் பிரிவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது பெயரையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய ஒருநாள், டி20, டெஸ்ட் வீரர் மற்றும் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதுகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர், பத்தாண்டுகளின் சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விரர்/ வீராங்கனைகள் விவரம்:

பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்:

  • விராட் கோலி (இந்தியா)
  • ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)
  • ஜோ ரூட் (இங்கிலாந்து)
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
  • ஏபிடி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • குமார் சங்ககாரா (இலங்கை)

பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீராங்கனை:

  • மிதாலி ராஜ் (இந்தியா)
  • எல்ஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
  • மெக் லானிங் (ஆஸ்திரேலியா)
  • சுசி பேட்ஸ் (நியூசிலாந்து)
  • ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்)
  • சாரா டெய்லர் (இங்கிலாந்து).

பத்தாண்டுகளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்:

  • எம்.எஸ்.தோனி (இந்தியா)
  • ரோஹித் சர்மா (இந்தியா)
  • விராட் கோலி (இந்தியா)
  • லசித் மலிங்கா (இலங்கை)
  • மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
  • ஏபி டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • குமார் சங்ககாரா (இலங்கை).

பத்தாண்டுகளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீராங்கனை:

  • மிதாலி ராஜ் (இந்தியா)
  • ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
  • மெக் லானிங் (ஆஸ்திரேலியா)
  • எல்ஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
  • சுசி பேட்ஸ் (நியூசிலாந்து),
  • ஸ்டஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்).

பத்தாண்டுகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்:

  • விராட் கோலி (இந்தியா)
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
  • ரங்கனா ஹெராத் (இலங்கை)
  • யாசிர் ஷா (பாகிஸ்தான்).

பத்தாண்டுகளில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்:

  • விராட் கோலி (இந்தியா),
  • ரோஹித் சர்மா (இந்தியா).
  • ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)
  • இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா),
  • ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா),
  • லசித் மலிங்கா (இலங்கை),
  • கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்:

  • எம்.எஸ். தோனி (இந்தியா)
  • விராட் கோலி (இந்தியா),
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)
  • மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்)
  • அன்யா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து)
  • கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து)
  • மகேலா ஜெயவர்தன ( இலங்கை)
  • டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து).

இதையும் படிங்க:AUS vs IND : முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித், இஷாந்த் விலகல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.