ETV Bharat / sports

‘இந்திய வீரர் போல மாறவேண்டும்’ - ஆஸ்டன் அகர் ஓபன் டாக்!

author img

By

Published : May 18, 2020, 9:47 PM IST

ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆஸ்டன் அகர், இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவைப் போன்று சிறப்பான வீரராக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

I look up to Ravindra Jadeja: Australian spinner Ashton Agar
I look up to Ravindra Jadeja: Australian spinner Ashton Agar

ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ஆஸ்டன் அகர். இவர் தனது சிறப்பான ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் மீண்டும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அகர் கூறுகையில், “நான் ரவீந்திர ஜடேஜாவைப் போன்று ஒரு சிறப்பான வீரராக மாறவேண்டும். அதனை பூர்த்தி செய்யும் விதமாக தென் ஆப்பிரிக்க தொடரில் நான் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் அமைந்தது.

மேலும் ஜடேஜாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டை எந்த சூழலிலும் ரசிப்பு தன்மையுடன் விளையாடி வருகிறார். மேலும் அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றிக்கு மிகவும் அவசியமான வீரராக தற்போது வலம்வந்து கொண்டுள்ளார்.

ஆஸ்டன் அகர் நேர்காணல்

கடந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் போது ஜடேஜாவிடம் பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்போது நான் அவரிடன் நிறைய விஷயங்களை கேட்டறிந்தேன். அது அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியதற்கு வழிவகுத்தது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'நான் ரெய்னா ரசிகன்...' - மனம்திறந்த ஜான்டி ரோட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.