ETV Bharat / sports

BWFஇன் ‘ஐ யம் பேட்மிண்டன்’ தூதராக நியமிக்கபட்டார் பி.வி.சிந்து!

author img

By

Published : Apr 22, 2020, 6:08 PM IST

இந்திய அணியின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும் உலகச்சாம்பியனுமான பி.வி. சிந்துவை, ‘ஐ யம் பேட்மிண்டன்’(I AM BADMINTON) விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தூதராக நியமித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது.

BWF names PV Sindhu as 'i am badminton' campaign ambassador
BWF names PV Sindhu as 'i am badminton' campaign ambassador

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிதாக ‘ஐ யம் பேட்மிண்டன்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலமாக வீரர்கள் நேர்மையான விளையாட்டை ஆதரிப்பதன் மூலம், இவ்விளையாட்டின் மீதான அன்பையும், மரியாதையையும் காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தோடு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிகான தூதராக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், உலகச்சாம்பியனுமான பி.வி. சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து உலகின் பல முன்னணி பேட்மிண்டன் வீரர்களும் இந்நிகழ்ச்சியின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிந்து கூறுகையில், நாம் எந்த விளையாட்டில் பங்கேற்றாலும் அதில் நேர்மையாக விளையாடுவது மிகவும் அவசியம். இதன் மூலமாக நாம் அனைவரும் இணைந்து ஒரே குரலில் நேர்மையாக விளையாடுவதை ஆதரிப்போம். இதனால் அனைத்து வீரர்களுக்கும் இச்செய்தியானது எளிதில் பரவும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இதனை நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாட வேண்டியது மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய டென்னிஸ் வீரருக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.