ETV Bharat / sitara

’வாத்தி கம்மிங்’ - ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய பிக்பாஸ் முதல்நாள்!

author img

By

Published : Oct 5, 2020, 10:12 AM IST

சென்னை: ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் முதல்நாள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்று (அக்.03) முதல் ஒளிப்பரப்பாகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி வழக்கம்போல் இம்முறையும் 106 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் நாளான இன்று(அக்.05) விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யின் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடுகின்றனர். முதல் நாள் என்பதால் இவர்களுக்குள் எந்த தகராறும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை இரவு 9.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9 மணிக்கு பிக்பாஸ் ஒளிப்பரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 16 போட்டியாளர்களுடன் கலக்கலாகத் தொடங்கிய 'பிக்பாஸ் 4'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.