ETV Bharat / sitara

விஷாலின் 'மார்க் ஆண்டனி' கைவிடப்பட்டதா?

author img

By

Published : Mar 9, 2022, 9:53 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷாலின் 33ஆவது படமாக உருவாகுவதாக இருந்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

விஷால்
விஷால்

சமீபத்தில் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற படம் வெளியானது. தற்போது விஷால், வினோத் குமார் இயக்கத்தில் 'லத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது, கையில் ஏற்பட்ட காயத்திற்காக கேரளா சென்று சிகிச்சை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார், விஷால். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'மார்க் ஆண்டனி' யாக விஷால்

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையைக் கேட்டு பிடித்துப்போன விஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று தலைப்பு வைக்கப்பட்டு, பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதாகவும் செய்தி பரவியது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படமும் வெளியானது.

விஷால்-33 படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் அப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 'எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்க இருந்தது.

படப்பிடிப்பு கைவிடப்பட்டதா?

ஆனால், தற்போது 'மார்க் ஆண்டனி' திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஷாலுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே இப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னர் பேசியிருந்த இயக்குநர் ஆதிக், படப்பிடிப்புக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மார்ச் தொடங்கியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்பதோடு விஷால் 'லத்தி' படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனாலேயே 'மார்க் ஆண்டனி' படத்துக்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதையும் படிங்க: அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடு சிறப்பு தபால் தலை உறை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.